பாடல் எழுதக் கற்றுக் கொள்ளப் படிப்பு

Visit Website Add Favorites Contact Author
no-image-43476

காலத்தால் அழியாப் பாடல் படைக்க.. பாடல் எழுதக் கற்றுக்கொள்ள.. பாடலாசிரியராய் பரிணமிக்க.. படைப்பாளியாய் உயர.. தாளா விருப்பமெனில்.. இந்தத் தகவல் உங்களுக்கானதுதான்..

 

பாடலாசிரியர் பிரியன் தலைமையில்.. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது.. உலக வரலாற்றில் முதல்முறையாக.. தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing).

 

இதுவரை எளிதில் அறிந்துகொள்ள இயலாதிருந்த பாடல் இயற்றும் அறிவு. ஒரு முழுமையான பாடல் இயற்றுநராய் மிளிரத் தக்க பல வாய்ப்பு. நேரடியாக பாடலாசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் அனுபவம். பல்கலைக்கழக அளவில் திரைப்பாடல் இயற்றுநர் படிப்புக்கான அங்கீகாரம். இவை அனைத்தும் இதில் வசம்.

 

எஸ்.ஆர்.எம். சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரியில், வரும் ஜீலை 2013-ஆம் ஆண்டிற்கான திரைப்பாடல் இயற்றுநர் வகுப்பில் இணைய விரும்புபவர்கள்.. diplyric.srmatgmaildotcom என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் புகைப்படத்துடன் கூடிய முழு சுயவிவரங்கள் (Bio-data) மற்றும் கவிதை, பாடல் என முன் படைத்த ஏதாவது ஒரு பதிவை இணைத்து அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.. தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் எழுபது நபர்களுக்கு சேர்க்கைக்கான தகவல் தரப்படும்.

 

திரைப்பாடல் இயற்றுநர் – ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு

குறைந்தபட்சக் கல்வித்தகுதி – பன்னிரெண்டாம் வகுப்பு (any group)

சிறப்புத் தகுதி – தமிழ்ப் பாடத்தில் குறைந்தபட்சம் 55 சதவிகிதம்.

கூடுதல் தகுதி – கவிதை, பாடல் எனப் படைப்புப் பதிவு ஏதாவது.

இடம் – எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரி, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்.

 

மேலும் விவரங்களுக்கு.. – 8056161139

மின்னஞ்சல் – diplyric.srmatgmaildotcom

 

 


No Feedback Received